ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி காணாமல் போனதாக சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகார் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்தனர்.
சிறுமியை கடத்தி கட்டாய பாலியல் தொழிலுக்கு தள்ளிய கும்பல் - பாலியல் அத்துமீறல்
சண்டிகர்: குருஷேத்ரா நகரைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்தி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காணாமல் போன சிறுமி சிலரது உதவியுடன் மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சில ஆண்களால் கடத்தப்பட்டதாகவும், பின்னர் ஒரு பாலியல் தொழிலாளியிடம் விற்கப்பட்டதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஒரு இஸ்லாமிய நபரால் கட்டாய திருமணத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர் ஹரியானா மகளிர் ஆணையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர்.
இது தொடர்பாக பேசிய மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் நம்ரதா கவுர, "பாதிக்கப்பட்ட சிறுமி கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிகிறது. சிறுமி ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு ஆண்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.