ஹரியானா குத்துச் சண்டை பயிற்சியாளர் தன்னிடம் பயிற்சி எடுத்த 19 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் மேற்குவங்கத்தில் நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் பங்குபெறுவதற்காக தனது பயிற்சியாளர் மற்றும் சக குத்துச்சண்டை வீரர்களுடன் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா சென்றார்.
ரயில் பயணத்தின் போதும், கொல்கத்தாவில் தங்கியிருந்த போதும் குத்துச் சண்டை பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஹரியானா அருகேயுள்ள சோனிபட்டில் வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளரை கைது செய்தனர்.