ஹரியானா மாநில சட்டப்பேரவை தொகுதிக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பக்ஷிர்க் விர்க் பரப்புரையின் போது, நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாரதிய ஜனதாவுக்குதான் விழும் என்று பொருள்பட பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த காணொலி ஆதாரங்களுடன் எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், விளக்கம் அளிக்குமாறு பக்ஷிர்க் விர்க்குக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.