தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு - நாட்டில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி: நாட்டில் கொரோனா (கோவிட்19) வைரஸ் பாதிப்பு 33 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Harsh Vardhan  PM Modi  Coronavirus meeting  PM Modi meeting over Coronavirus  Coronavirus disease  Narendra Modi  நாட்டில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா வைரஸ், இந்தியா, பாதிப்பு
Harsh Vardhan PM Modi Coronavirus meeting PM Modi meeting over Coronavirus Coronavirus disease Narendra Modi நாட்டில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா வைரஸ், இந்தியா, பாதிப்பு

By

Published : Mar 7, 2020, 12:54 PM IST

அண்டை நாடான சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா என்னும் கோவிட்19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மூவாயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுக்க 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று காணப்படுகிறது. இதுவரை 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுவருகிறது. மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று சந்தித்த ஆலோசனை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:'விவசாயிகளின் பிரச்னைக்குச் செவிசாயுங்கள்'- பாஜ அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details