உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி மாவட்டத்தை அடுத்துள்ள ஒரு சந்தையில் ஏழை தொழிலாளர்கள் நாள்தோறும் தங்களைத் தாங்களே மனிதச் சந்தையில் ஏலம் விட்டு, பணி செய்து அதன் மூலம் வரும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத கட்டாய சூழலில், மனிதர்கள் தங்களை கூலி வேலைக்கு விற்பனை செய்துகொள்ளும் இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில்கூலி தொழிலாளர்கள் கூடுகின்றனர். தங்கள் முறை வரும் வரை காத்திருந்து, பின்னர் ஏலம் எடுக்கப்பட்டு அந்த பணியை செய்து அன்றாட வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும், இந்த சந்தை மனித வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பெரும்பாலும் தினசரி கூலிகளாக வேலைக்கு எடுக்கப்படும் தொழிலாளர்கள், அவரவருக்கு ஏற்ற நிர்ணயிக்கப்பட்ட பேரத்தில் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.