உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் குலிஸ்தனா (Gulistana) என்ற இஸ்லாமியப் பெண் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். அண்மையில் இவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
'பாஜகவில் சேர்ந்தது ஒரு குத்தமா?' - இஸ்லாமியப் பெண் கேள்வி - இஸ்லாமிய பெண்கள்
லக்னோ: பாஜகவில் சேர்ந்ததற்காக இஸ்லாமியப் பெண்ணை வீட்டிலிருந்து காலி செய்ய அந்த வீட்டின் உரிமையாளர் தொந்தரவு செய்வதாகப் புகார் எழுந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் அலிகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
BJP
இந்நிலையில், பாஜகவில் தான் இணைந்ததைத் தெரிந்துகொண்ட வாடகை வீட்டின் உரிமையாளர், தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், உடனடியாக வீட்டை காலி செய்யக்கோரி தொல்லை கொடுப்பதாகவும், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட அலிகர் காவல் ஆய்வாளர் ஆகாஷ் குல்ஹரே, இது தொடர்பாக விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.