நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகளை மீறி அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் அவர்களது நண்பர்கள் வெளியில் சுற்றித் திரிந்துள்ளனர்.
அமைச்சர் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் காவலர் பணியிடமாற்றம்! - சூரத் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் சுனிதா யாதவ்
காந்திநகர்: ஊரடங்கின்போது வெளியில் சுற்றித்திரிந்த அமைச்சரின் மகனைத் தடுத்துநிறுத்திய பெண் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களை, வராச்சா சாலையில் சூரத் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பிரகாஷ் கனானி, பெண் காவலரை மிரட்டியுள்ளார். அந்த உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியது.
இதற்கிடையில், அமைச்சரின் மகனும், அவரது நண்பர்களும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர். இச்சூழலில், பெண் காவலர் சுனிதா யாதவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுனிதா யாதவ் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் அழுத்தத்தால் இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.