இந்தியாவில் அரசுப்பள்ளிகள் என்றால் சில அடிப்படை வசதிகள் மட்டுமே செய்யப்பட்ட பழைய கட்டடங்கள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அதே அரசுப்பள்ளிதான் கியூஆர் கோடு (QR Code) பொருத்தப்பட்ட அடையாள அட்டை, டிஜிட்டல் முறையில் கல்வி, வெப் போர்ட்டல் டெக்னாலஜி என இந்தியாவின் மாடல் டிஜிட்டல் பள்ளியாக அசத்தி வருகிறது குஜராத்தின் கர்தாஜ் கிராமத்தில் உள்ள டெக் சாவி (Tech - Savvy) மகளிர் அரசுப்பள்ளி.
இந்த பள்ளியில் ஆசிரியர் - பெற்றோர் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்தும் வகையிலும், குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளி சென்றுவிட்டார்களா என்று கண்டறிவதற்கும், தேர்வு பயத்தைப் போக்குவதற்கும் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அது, மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை கியூஆர் கோடுகள் மூலம் வருகையைப் பதிவு செய்ததும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடுகிறது. அதேபோல் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்களா என்பதை மொபைல் செயலி மூலம் பெற்றோர்கள் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.