தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2019, 9:49 AM IST

ETV Bharat / bharat

நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள பெட்லாட் நகரம்!

காந்திநகர்: பிளாஸ்டிக்கால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் நோக்கில் தன்னால் முடிந்த பங்கினை குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லாட் நகரம் ஆற்றிவருகிறது.

Plastics
Plastics

பெட்லாட் நகரத்தை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்கழிவுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதிகளவிலான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ளது. மறுமுனையில், ஐந்து விழுக்காடு கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறது. நொடிக்கு நொடி உலகத்தின் பெரிய பிரச்னையாக பிளாஸ்டிக் மாறிவருகிறது.

தரம் குறைந்த பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க மாவட்ட நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்துவருகிறது. நகராட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் வீடுதோறும் சென்று பிளாஸ்டிக்கை வகைப்படுத்தியும் அதனை சேகரித்தும்வருகின்றனர். குப்பைகள் கொட்டப்படும் பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பைரோலிசஸ் ஆலையில் கழிவுகளிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெட்லாட் நகரம்

குறைந்த வேகமுடைய டீசல் எஞ்ஜின்களை இயக்குவதற்கும் நிதிச் செலவுகளை பூர்த்தி செய்வதற்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்போது, சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கு கைமாறாக அந்நிறுவனம் அலங்காரப் பொருட்களையும் தோட்ட உபகரணங்களையும் அளிக்கிறது.

குறைந்த செலவில் சிறப்பான முறையில் பிளாஸ்டிக் இல்லா நகரமாக்கும் சவாலை பெட்லாட் நகராட்சி மேற்கொண்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ளதாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை சட்ட போராளிகளுக்கு காங்கிரஸ் சட்ட உதவி?

ABOUT THE AUTHOR

...view details