அகமதாபாத் (குஜராத்): தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த சுன்ரிவாலா மாதாஜி சாமியார், தனது 70ஆவது வயதில் இன்று காலமானார்.
நீர், உணவு உட்கொள்ளாமல் வாழ்ந்ததாகக் கூறப்பட்ட மனிதர் மரணம்!
குஜராத்தின் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த சரடா கிராமத்தில் பல ஆண்டுகளுக்கும் மேலாக உணவு, தண்ணீர் இல்லாமல் உயிர் பிழைத்து வந்ததாகக் கூறப்படும், பிரஹ்லாத் ஜானி என்ற சுன்ரிவாலா மாதாஜி காலமானார்.
சுன்ரிவாலா மாதாஜியின் கடைசி மூச்சு அவர் சொந்தக் கிராமமான சரடாவில் பிரிந்துள்ளது. அவருக்குப் பெரும் அளவிலான சீடர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் உணவும், தண்ணீரும் உட்கொள்ளாமல் வாழ்ந்து வந்ததாகக் கூறப்பட்ட இவரை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து பார்த்து வியந்ததாகவும்; சீடர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது உடல் இறுதிச்சடங்கு பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள அம்பாஜி ஆலயத்தில் வைத்து நடைபெறும் என்று ஜானி ஆசிரம நிர்வாகம் தெரிவித்துள்ளது.