நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொற்று பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே சமயம், சுகாதாரப் பணியாளர்களும், காவலர்களும் தங்களுடைய பணியை முன்னின்று செயல்படுத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், துணை காவல் ஆய்வாளர் பாவ்னாபென் தேசாய், முழு ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து காவல் பணி கடமையில் இருக்கிறார். அதனால், அவர் தனது ஒன்றரை வயது மகனை, சொந்த கிராமத்தில் உறவினர்களிடம் விட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்.
முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு, பவ்னாபென் தேசாய், தனது மகனுடன் மெஹ்சானாவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தார். ஆனால், இத்தனை நாட்கள் தனது குழந்தையைப் பிரியப்போகிறார் என்ற உண்மையை அறியாமல், அவர் மார்ச் 24ஆம் தேதி முதல் இடைவெளி இல்லாமல், ஊரடங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ளார்.