தமிழ்நாடு

tamil nadu

குஜராத் முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கரோனா

By

Published : Apr 15, 2020, 9:27 AM IST

காந்திநகர்: குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை நேற்று சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேதாவாலாவுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இம்ரான் கேதாவாலா
இம்ரான் கேதாவாலா

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜமலாபூர் தொகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கேதாவாலா. இவர் தனது சக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் நேற்று (ஏப்ரல் 14) ஆலோசனை நடத்தினர்.

குஜராத் மாநிலத்தில் இதுவரை 650க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், 28 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக இம்ரான் கதேவாலாவின் பகுதியான அகமதாபாத்தில் அதிகமாக 373 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய 6 மணி நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரானுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பரிசோதனை மேற்கொண்ட நபர் தனிமையில் இல்லாமல் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது எப்படி என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் நிதின் படேலும் உடன் இருந்துள்ளார். முதலமைச்சரிடமிருந்து 10 அடி தொலைவில் அமர்ந்துதான் இம்ரான் பேச்சுவார்த்தை மேற்கொண்டார் எனவும், இருப்பினும் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் வெளிமாநில தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details