தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்க சொகுசு தீவில் நித்யானந்தா... வெளியான அதிர்ச்சி தகவல்! - சாமியார் நித்யானந்தா தப்பியோட்டம்

அகமதாபாத்: குஜராத் காவலர்கள் வலைவீசி தேடிவரும் நிலையில் சாமியார் நித்யானந்தா அமெரிக்காவின் பிலிஜி தீவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Guj police reached Nityananda ashram in search of self styled god man
Guj police reached Nityananda ashram in search of self styled god man

By

Published : Nov 30, 2019, 7:45 PM IST

தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு சமூகத்தில் வலம் வந்தவர் நித்யானந்தா. இவரது புகழ்பெற்ற ஆசிரமம் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அமைந்துள்ளது. இவர் மீது கொலை, பாலியல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளது. இவருக்கு குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரிலும் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் மூன்று இளம் பெண்கள் சட்டவிரோதமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.

இதையடுத்து, காவலர்கள் இவரைத் தேட ஆரம்பித்தனர். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த நித்யானந்தா, வெளிநாடு தப்பித்துச் சென்றுவிட்டார். இந்த நிலையில் இன்றும் அகமதாபாத்தில் உள்ள இவரது ஆசிரமத்தில் காவலர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சில முக்கிய ஆவணங்களை காவலர்கள் கைப்பற்றியதாகவும் தெரிகிறது. காவலர்களின் முதல் கட்ட விசாரணையில் நித்யானந்தா, அமெரிக்காவின் சொகுசு தீவான பிலிஜி தீவில் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: வெளிநாடுக்கு தப்பியோடிய நித்தியானந்தா - இறுக்கும் காவல் பிடி.....

ABOUT THE AUTHOR

...view details