தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பயணச்சீட்டை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை சராசரியைவிட 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஆன்லைன் பயண முன்பதிவுத் தளமான கோயிபோவின் தரவின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பயண முன்பதிவுகள் வாரந்தோறும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுவருகிறது. இளம் தம்பதிகள், நண்பர்கள் குழு உள்ளிட்ட பயணிகள் இந்தண்டு தீபாவளி பண்டிகையின்போது பயணங்களை மேற்கொள்ள அதிகளவில் திட்மிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது சற்று இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையும் வருவதையொட்டி நீண்ட நாள்களுக்குப் பிறகு தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் பயணம் மேற்கொள்ள கோவா, கேரளா, கூர்க், டார்ஜிலிங் ஆகிய இடங்களுக்குச் செல்ல அதிகளவில் முன்பதிவு செய்வதாக கூறப்பட்டுள்ளது.