தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2020, 5:51 PM IST

ETV Bharat / bharat

காற்றில் பறந்த தகுந்த இடைவெளி - மணமகன், தந்தை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு!

ஒடிசா அரசு அறிவுறுத்திய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் திருமணம் நடத்திய குடும்பத்தினர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மணமகன்
மணமகன்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முகக் கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடித்து திருமணம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் அரசு அறிவுறுத்தி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் திருமணம் நடத்தியுள்ளனர்.

இதனால் அம்மாநில காவல் துறையினர், மணமகனின் தந்தை, அவரது சகோதரர் ஆகியோரின் மீது வழக்குப் பதிவு செய்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒடிசா மாநில முதலமைச்சர், "கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் உதவி செய்ய வேண்டும். அரசு அறிவுறுத்தியதை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details