மாநிலத்தில் தீவிர கோவிட் -19 பரவல்!
அகமதாபாத்தில் மட்டும் 14,000 நபர்களால் வைரஸ் தொற்று தீவிரமாக பரவியது. இந்தியாவில் கரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், வைரஸ் தொற்று பல மாநிலங்களிலும் கண்டறியப்பட்டது. அப்போது குஜராத் மாநிலம் இதில் விதிவிலக்காக இருந்தது. ஆனால், நாளடைவில் வைரஸ் அதிதீவிரமாக பரவத் தொடங்கியது, அதை கட்டுப்படுத்த முயலும் அதிகாரிகள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலங்களில் குஜராத் இரண்டாம் இடம் வகிக்கிறது. தொடரும் பாதிப்புகள், மரணங்களால், மார்ச் 22ஆம் தேதி முதல் அபாயகரமான பகுதியாக அகமதாபாத் உள்ளது.
வைரசின் தொடக்கம்...
டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மூலமாகதான் குஜராத் மாநிலத்தில் வைரஸ் பரவல் அதிகரித்தது என கூறப்படுகிறது. ஆனால், வைரஸ் பரவலைப் பற்றிய விழிப்புணர்வற்று குஜராத் அரசாங்கம் செயல்பட்டதே தற்போதைய நிலைக்கு முக்கிய காரணம். அகமதாபாத்தைத் தொடர்ந்து சூரத், ராஜ்கோட், வடோடரா, பாவ்நகர் மற்றும் புஜு ஆகிய இடங்களிலும் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. கரோனாவால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் சரளமாக உயர்ந்தது.
செயல்படுத்தப்பட்ட கடுமையான நடவடிக்கைகள்..
வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, குஜராத் அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. முதலமைச்சர் விஜய் ரூபானி, மார்ச் 22ஆம் தேதி பகுதி நேரமாக ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 24-க்கு பிறகு ஊரடங்க்கு நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டன, பால் பொருட்களின் விற்பனைக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஊரடங்கி விதியை மீறிய 500 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்கின் மூன்றாம் கட்டத்தில், அரசாங்க நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டன. ஆனால், மாநிலத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக யோசனையின் பயன்கள்..
டெல்லி எய்ம்ஸ் மருத்துமனை மருத்துவர்கள், குஜராத்துக்கு வருகை தந்து அரசு மருத்துவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். தனியார் மருத்துவமனைகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மையங்களாக செயல்படும்படி அரசு அறிவித்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களை வீட்டுக்கு செல்ல அனுமதிப்பதில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வழங்கிய யோசனைகளை மாநில அரசாங்கம் பின்பற்றத் தொடங்கியதன் விளைவாக, பலர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அகமதாபாத்தின் அவலநிலை...
பால், காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்பவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வைரஸ் அச்சுறுத்தல் அதிகம். கரோனா சூழலில் மக்கள் பணி செய்பவர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களின் மூலமாக பரவல் அதிகரிக்கும். வைரஸ் தொற்று பரவலை அதிகரிக்கும் 14,000 நபர்கள் மாநிலத்தில் இருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அனைவருக்கும் முறையான பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.