ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கக்போரா டெசில் பகுதியின் சோதனைச்சாவடியில் காவல் துறையினர், துணை ராணுவப்படையினர் இணைந்து வாகனங்களைச் சோதனைசெய்தனர்.
துணை ராணுவப்படை வீரர்கள் மீது கையெறி குண்டுகள் வீச்சு! - கையெறி குண்டிகள் வீச்சு
புல்வாமா மாவட்டத்தில் சோதனைச்சாவடியிலிருந்த காவல் துறையினர், துணை ராணுவப்படை வீரர்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
துணை ராணுவப்படை வீரர்கள் மீது கையேறி குண்டுகள் வீச்சு
அப்போது சமூகவிரோதிகள் சிலர், அவர்கள் மீது கையெறி குண்டுகள் வீசி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்தில் காவல் துறையினர், துணை ராணுவப் படையினர் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து, அந்தச் சமூகவிரோதிகள் யார்? பயங்கரவாதிகளா அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரணை நடத்தும் அதேவேளையில் அவர்களைக் காவல் துறையினரும் துணை ராணுவப்படையினரும் தேடிவருகின்றனர்.