தேசிய தலைநகரில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. நவ.10ஆம் தேதி மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 593ஆக இருந்தது.
இந்நிலையில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' நவ.7ஆம் கரோனா சோதனை செய்யப்படுபவர்களில் 15 சதவிகிதம் பேருக்கு கரோனா இருந்தது. அது இப்போது 11 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடைசியாக நவ.10ஆம் தேதி தான் அதிகபட்சமாக கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது.
கரோனா உறுதி செய்யப்படும் சதவிகிதம் குறைந்து வருகிறது என்பது கரோனாவின் தாக்கம் குறைவதை தெளிவாக காட்டுகிறது. இதனால் டெல்லியில் கரோனா தொற்றின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது.