தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெரும் பணக்காரர்களின் வரி குறைக்கப்படுமா? - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பெரும் பணக்காரர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரி குறைக்கப்படுமா என்பது குறித்து 2022ஆம் ஆண்டு முடிவு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

By

Published : Aug 24, 2019, 6:01 AM IST

நடப்பாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருந்தார். ஆனால், நாட்டின் பொருளாதார நிலை மந்தமடைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

இதில் , பெரும் பணக்காரர்களுக்கு உயர்த்தப்பட்டிருக்கும் வரி குறைக்கப்படுமா என்பது குறித்து 2022ஆம் ஆண்டுதான் முடிவு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பெரும் பணக்காரர்களுக்கு வரி 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details