கொரோனா நோய்க் கிருமியின் தாக்கத்தால் நாடுகளிடையே ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் வீழ்ச்சியைக் கண்டது. அதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இவ்வேளையில் பெட்ரோல், டீசல் விலையைத் தற்போதுள்ள விலையிலே நிலைநிறுத்த மத்திய அரசு அதற்கான கலால் வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், பெட்ரோலுக்கான சிறப்புக் கலால் வரியை 2 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், டீசலுக்கு நான்கு ரூபாய் உயர்த்தியும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.