கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகள் வழங்கிவருகிறது.
தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலானதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிய தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நாளை சில சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சலுகைகள் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள சில முக்கியத் தொகுதிகளுக்கு மட்டும் அமல்படுத்தப்படவுள்ளதாகவும், இதற்காகச் சில முக்கிய அலுவலர்கள் செயல்பட்டுவருவதாகவும் தெரிகிறது.
அகுயிட் ரேட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய அரசு 150 பில்லியன் மதிப்பிலான (இந்திய மதிப்பில் 11.2 லட்சம் கோடி ரூபாய்) அறிவிக்கப்படவுள்ளதாகவும், ஊரடங்கு உத்தரவினால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு உற்பத்தியைக் கருத்தில்கொண்டு இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்தப் பொருளாதாரச் சலுகைகள் அனைத்து மாநிலங்களுக்கும் அளிப்பது சாத்தியமில்லாதது என்றும், பொருளாதாரத்தில் ஒரளவு மேம்பட்டுள்ள கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு சலுகைகளை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.