தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர ஆணையம்: அரசு உத்தரவு - எஸ்எஸ்சி

டெல்லி: ராணுவத்தில் பெண் அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ராணுவம்
ராணுவம்

By

Published : Jul 23, 2020, 10:01 PM IST

ராணுவத்தில் பெண் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நோக்கில் நிரந்தர ஆணையத்தை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், "ராணுவத்தில் பெண் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நோக்கில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Short Service Commission எனப்படும் எஸ்எஸ்சியை சேர்ந்த பெண் அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையத்தை அமைக்கும் நோக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. விமானப் படை, பொறியியல், புலனாய்வு உள்ளிட்ட ராணுவத்தின் பத்து பிரிவுகளில் உள்ள பெண் அலுவலர்களுக்கு இது பொருந்தும்.

பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற பெண் அலுவலர்கள் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்த பின் ஆணையத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க: 1984 சீக்கிய கலவரம்: குற்றவாளியின் பிணை தொடர்பாக சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details