இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் மத்திய அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால் ஜிம், யோகா பயிற்சி நிலையங்கள் செயல்பட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டே வந்தது.
ஜிம், யோகா பயிற்சி நிலையங்களை திறக்க மத்திய அரசு அனுமதி! - Latest corona Virus
டெல்லி: இந்தியாவில் ஜிம், யோகா பயிற்சி நிலையங்களைத் திறக்க சில கட்டுப்பாடுகளுடன் மத்திய சுகாதாரத் துறை அனுமதியளித்துள்ளது.
govt-issues-guidelines-for-reopening-of-gyms-yoga-institutes
இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 3) ஜிம், யோகா பயிற்சி நிலையங்கள் செயல்பட சில கட்டுப்பாடுகள் மூலம் சுகாதாரத் துறை அனுமதியளித்துள்ளது. அதில்,
- கரோனா வைரஸ் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே பயிற்சி செய்ய வேண்டும்.
- உடற்பயிற்சி நிலையங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
- ஜிம், யோகா பயிற்சி நிலையங்களுக்கு முன் சானிடைசர் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- அனைத்து பயிற்சி நிலையங்களிலும் பல்ஸ் ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) மூலம் பயிற்சி செய்பவர்களுக்கு, ஆக்சிஜன் சோதனை நடத்த வேண்டும்.
- கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஜிம், யோகா பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
- உடற்பயிற்சி கூடங்களுக்கு வருவோரின் பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும்.
- லாக்கர்களைத் திறக்கக்கூடாது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- உடற்பயிற்சியில் ஈடுபடும்போது ஒவ்வொரு நபர்களுக்கும் குறைந்தது 4 மீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.
- உடற்பயிற்சிக் கூடத்தில் பயன்படுத்தப்படும் ஏ.சி.-யின் அளவு 24 டிகிரியிலிருந்து 30 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.
- யோகா பயிற்சி நிலையங்களில் ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் 15இல் இருந்து 30 நிமிடங்கள் வரை, இடைவெளி விட வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கடமையைச் செய்த ஈடிவி பாரத் செய்தியாளருக்கு எதிராக 3 வழக்குகள் - செய்தியாளரின் குரல்வளை நெறிக்கப்படுவதாக நீதிமன்றம் கருத்து!