தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்ரோன் தயாரிப்பு வரைவு விதிகள் வெளியீடு! - ஆளில்லா விமானங்கள்

கரோனா பெருந்தொற்று காலத்தில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ட்ரோன் உற்பத்திக்கும் பயன்பாட்டுக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Drones Civil Aviation Ministry coronavirus lockdown ட்ரோன்களுக்கான கட்டுப்பாடு ட்ரேன்கள் பயன்படுத்தும் விதிகள் ஆளில்லா விமானங்கள்
ட்ரோன்களை இயக்க மத்திய அரசு வகுத்துள்ள விதிகள்

By

Published : Jun 6, 2020, 5:00 AM IST

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ட்ரோன் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ட்ரோன் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெறவேண்டும்.

அங்கீகரிக்கப்படாதா, ஆளில்லாத விமானங்களை அங்கீகரிக்கப்ட்ட வர்த்தகர்களைத் தவிர வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. ஆளில்லா விமானங்களின் உற்பத்தி, பராமரிப்பு வசதியை ஆய்வு செய்ய இந்த வரைவு விதிகளின் கீழ் ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அதிகரம் உண்டு.

அனுமதியளிக்கப்படாத எந்த சுமையையும் ஆளில்லா விமானங்கள் சுமக்க கூடாது. பொதுவாக இந்தியாவில் 250 கிராம் எடைக்கு குறைவாக உள்ள ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதைவிட கூடுதல் எடையுள்ள ஆளில்லாத விமானங்களை தகுதிவாய்ந்த ரிமேட் விமானிகளே இயக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மருந்துகள் கொண்டு செல்லப் பயன்படும் ட்ரோன்கள்...!

ABOUT THE AUTHOR

...view details