இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் பலர் குணமடைந்ததும், மற்றவர்களின் சிகிச்சைக்காகத் தங்களின் பிளாஸ்மாக்களை வழங்கினர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஐஏஎஸ் அலுவலரான முகமது மொஹ்சின் ஏப்ரல் 27ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானமாகக் கொடுத்துள்ளனர். இந்த ஹீரோக்களின் மனிதநேயம் குறித்த எந்த ஊடகமும் காட்டாது" என்று பதிவிட்டிருந்தார்.
கோவிட்-19 தொற்றால் உருவாகியுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இவரது இந்த ட்விட்டர் பதிவு பல ஊடகங்களில் செய்தியானதைத் தொடர்ந்து இது குறித்து ஐந்து நாள்களில் விளக்கமளிக்கக் கூறி கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.