தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு! - Union Minister Prakash Javadekar

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படியை உயர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

ஊழியர்கள்

By

Published : Oct 9, 2019, 4:34 PM IST

தீபாவளி பண்டிகை வருவதையோட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அகவிலைப்படியை 5% உயர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 12 % வழங்கப்பட்டு வந்ததை 17% என உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி வரை செலவு ஏற்படும் என்றார்.

அதேபோல் ஆஷா தொழிலாளர்களுக்கான சம்பளம் இரட்டிப்பாக உயர்ப்பட்டுள்ளதாகவும், இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 50 லட்சம் பேர் வரை பயன்பெறுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று மீண்டும் அகவிலைப்படி உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: அகவிலைப்படி உயர்த்தி வழங்கக் கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details