தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமர் கோயில் கட்ட மத்திய அரசு கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

டெல்லி: அயோத்தியில் புதிதாக அமையவுள்ள ராமர் கோயில் கட்டுமானத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளது.

MHA
MHA

By

Published : Feb 6, 2020, 11:48 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த் ஷேத்தரா அறக்கட்டளைக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.

அண்மையில், அயோத்தியில் நீண்ட காலமாக நிலுவையிலிருந்த சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டவும், அதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு மூன்று மாதத்துக்குள் அமைக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று (05.02.2020) 15 நபர் கொண்ட ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த் ஷேத்தரா அறக்கட்டளை அமைத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு மூத்த வழக்கறிஞர் பராசரன் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் நன்கொடை திரட்டப்படுகிறது. இதற்காக மத்திய அரசு தனது பங்களிப்பைக் காட்டும் விதமாக ஒரு ரூபாய் நிதி அளித்துள்ளது. இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் முர்மு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பணம் மட்டுமில்லாமல் எந்த விதத்திலும் தங்களின் பங்களிப்பை கொடையாக தரலாம் எனவும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘ராகுல் காந்தி ஒரு ட்யூப் லைட்’ - மக்களவையில் நக்கலடித்த மோடி

ABOUT THE AUTHOR

...view details