கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மக்களின் அத்தியாவசிய தேவைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.
இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதிலும், விவசாயத் துறை தங்கு தடையின்றி செயல்பட்டுவருவதாக தெரிவித்தார். மேலும், மற்ற துறைகள் பாதிப்படைந்தது போல் இத்துறையின் வளர்ச்சியில் பாதிப்பு இருக்காது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.