மத்திய தகவல் ஆணையத்தின் 14ஆவது ஆண்டறிக்கை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்டிஐ-யை குறைக்கத் திட்டம் - அமித் ஷா தகவல்! - மத்திய அமைச்சர் அமித்ஷா
ஆர்டிஐ-யை குறைத்து அனைத்து தகவல்களையும் பொதுத் தளத்தில் வெளியிட வழிவகை செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, ‘மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு உண்மைத் தன்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் இருந்து வருகிறது. அதன்படி, ஆர்டிஐ அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு மனு அளிக்கும் சிரமத்தைக் குறைத்து, இனி வெளிப்படையாக பொதுத் தளத்தில் தகவல்கள் பகிரப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க... ’நான் நல்லவனுக்கு நல்லவன்’ - ஜெகனை சாடிய சந்திரபாபு நாயுடு!