வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்துவருகிறது. அதனடிப்படையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்தியா திரும்ப நிபந்தனைகளோடு அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிவகை செய்திருக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப அனுமதி! - வெளிநாடு இந்தியர்கள்
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
Overseas of India
வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருக்கும் இந்தியாவில் பிறந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், இந்தியாவில் நிரந்தரக் குடியிருப்பு முகவரி வைத்திருக்கும் திருமணமான கணவனோ, மனைவியோ யாரோ ஒருவர் அங்கு இருந்தாலோ அல்லது இந்தியாவில் பிறந்து வெளிநாட்டிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவர்கள் ஆகியோர் இந்தியா திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:80 நாட்கள் கடந்து கொச்சி வந்த ஐ.என்.எஸ். சுனைனா!