புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று பேட்டி அளித்தபோது, துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டு குழப்பத்தை உருவாக்கிவருகிறார் எனத் தெரிவித்திருந்தார். இதற்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் பதிவில் கூறியிருப்பதாவது:
அறிவார்ந்த செயல்பாடுகளுடன் கரோனா பாதிப்புகளைக் குறைப்பதற்கு நிர்வாகத்திற்கு தற்போதைய தேவை ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன்கூடிய பங்களிப்பு, தொற்று குறைவதற்காகச் செய்யப்படும் செயல்பாடுகள் போன்றதாகும்.
அனைவரும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுடன் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும், பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதையும் நம்முடைய குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களைப் பற்றியும் அந்தச் சவால்களை எதிர்கொள்வதைப் பற்றிய சுருக்கமான செய்திகள், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், பாதுகாப்பான முறைகள் பற்றி மக்களிடம் தெரிவிக்கின்றோம்.