இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, "விண்டோஸ், மேக், லினெக்ஸ் என அனைத்து இயங்குதளங்களிலும் கூகுள் குரோம் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.
சில நாட்களில் அல்லது வாரங்களில் இந்த அப்டேட்டானது பயன்பாட்டிற்கு வருகிறது. குரோமில் கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்னை ஒன்றும் இந்த அப்டேட்டில் சரிசெய்யப்பட்டிருக்கிறது.
உங்கள் குரோம் செயலியை அப்டேட் செய்த பிறகு, நீங்கள் ஏதேனும் பிரச்னை எதிர்கொண்டால் உடனடியாக அதுகுறித்து கூகுள் கம்யூனிட்டி ஹேல்ப் ஃபாரமில் தெரிவியுங்கள்.
பெரும்பாலான கூகுள் பயனாளிகள் குரோமை அப்டேட் செய்த பிறகே, நாங்கள் கண்டறியவுள்ள பக் குறித்த தகவல் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இஸ்லாமியர்களுக்கு இந்தியாதான் சொர்க்கம் - மத்திய அமைச்சர்