நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தரவரிசைப் பட்டியல்படி, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகளும், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகள் தகுதிச் சுற்று மூலமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்து அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது.
கூகுள் டூடுல்: அசத்திய ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2019! - England & wales 2019
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில், இப்போட்டியை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள் தனது வலைதளப்பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், 12 நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் 45 லீக் போட்டிகள், மூன்று நாக்-அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியை இங்கிலாந்து ஐந்தாவது முறையாக நடத்துகிறது. இதில் இன்று தொடங்கும் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் இப்போட்டி ஆரம்பமாக உள்ளது.
இப்போட்டையை கௌரவப்படுத்தும் விதமாக கூகுள், உலகக்கோப்பையை டூடுலாக வெளியிட்டுள்ளது. இதில் போட்டிகள் நடைபெறும் இடங்கள், நேரம், மோதும் அணிகள் உள்ளிட்டவை பதிவிடப்பட்டுள்ளன.