"கல்விதான் உலகில் சக்திவாய்ந்த ஆயுதம், அதன் மூலம் உலகையே மாற்ற முடிவும்" என்பது நெல்சன் மண்டேலாவின் பொன்மொழி. இந்த பொன்மொழிக்கு ஏற்ப கல்வி கற்க வயது ஒருபோதும் தடையில்லை என்பதை காட்டுகிறது உத்தரப் பிரதேசத்திலுள்ள ராம்கரன் பிரஜாபதியின் முயற்சி.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்கரன் பிரஜாபதி. 79 வயதாகும் இவர் துலாம் பங்கத்வா என்ற கிராமத்தில் பானை வளைக்கும் தொழில் செய்துவருகிறார்.
சிறுவயதில் குடும்பத்தில் நிலவிய கடும் வறுமை காரணமாக, இவரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது. இருப்பினும் கல்வி மீது தீராத காதல் கொண்ட இவர், 1997ஆம் ஆண்டு தனது 55ஆவது வயதில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தார்.