திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக பைசல் ஃபரீத் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மீதான வழக்கை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
பைசல் ஃபரீத் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். ஆகவே இவரின் இருப்பிடத்தை கண்டறியும் வகையில் சர்வதேச போலீசார் ப்ளூ கார்டன் நோட்டீஸ் வழங்க வேண்டும் என என்.ஐ.ஏ. அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.