திருவனந்தபுரம்: கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத் தூதர் வியாழக்கிழமை (ஜூலை16) டெல்லியிலிருந்து மாயமானார்.
அவரின் பாதுகாவலர் கேரளத்தை சேர்ந்த ஜெய்கோஷூம் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெய் கோஷின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காவல் அலுவலர் அனில் குமார், “ஜெய்கோஷ் தூதரகத்தில் பணியில் இருந்தார். தற்போது அவர் மாயமாகி உள்ளார். அவருடன் ஸ்வப்னா இந்த மாத தொடக்கத்தில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது” என்றார். ஜூலை5ஆம் தேதி துபாயிலிருந்து திருவனந்தபுரம் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் சிக்கியது. இந்த வழக்கில் பல பெரிய தலைகள் சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவருகிறது.
இதையும் படிங்க: எல்லை ஒப்பந்தத்தை சீனா இப்போது மீறக் காரணம் என்ன? - ராகுல் கேள்வி