கர்நாடக அரசு 'தங்க ரதம்' என்று பெயரிடப்பட்ட தென்னிந்தியாவின் ஒரே ஆடம்பர ரயில் சேவை மிகவும் பிரபலமானது. இந்த ரயிலின் சிறப்பே ஆடம்பரமான வடிவமைப்பு, இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட தனி இருக்கை அதுமட்டுமல்லாது தனித்தனி கேபின், ஏசி வசதி கொண்ட அறைகள், ஏழு நாட்கள் பயணம் உள்ளிட்ட பிரத்யேக வசதிகளை கொண்டது இந்த தங்க ரத ரயில்.
கர்நாடகாவின் ’தங்க ரத ரயில்’ சேவை நிறுத்தம் - கர்நாடக அரசு
கர்நாடக அரசால் இயக்கப்பட்டு வந்த 'தங்க ரதம்' என்று பெயரிடப்பட்ட ஆடம்பர ரயிலின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
luxurious train
இந்த ரயிலின் பயணத் தொகை இரண்டு லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. சமீபத்தில், இந்த ரயில் எதிர்பார்த்த அளவிற்கு பயணிகள் பயணம் செய்யாமல் இழப்பை சந்தித்துவருகிறது. ஆகையால், கர்நாடகா சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சி.டி ரவி தற்காலிகமாக ரயிலின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.