தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் துர்கா பவானி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 21ஆம் தேதி ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான சாமியின் கிரீடம் திருடு போனதாக கோயிலின் பூசாரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
சாமி சிலையின் கிரீடத்தை களவாடிய நபர்; சிசிடிவி காட்சி வெளியாகியது! - கோயிலில் திருட்டு
ஹைதராபாத்: அபிட்ஸ் பகுதியில் உள்ள துர்கா பவானி கோயிலில் இருந்த சாமியின் கிரீடத்தை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியது.
பின்னர் விசாரணை நடத்திய காவல்துறை அலுவலர்கள், கோயிலின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சாமி சிலையின் கிரீடம் எவ்வாறு திருடப்பட்டது, யார் திருடினார்கள் என்பது குறித்து தெரியவந்தது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகின. அதில், சாமி கும்பிடுவது போல் நடித்துவிட்டு, சாமியின் கிரீடத்தை திருடிவிட்டு உடலில் மறைத்து வெளியேறியுள்ளார். இதனைக் கொண்டு காவல்துறையினர் அவரை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஓயாமல் அழுத குழந்தை! துப்பட்டாவால் அழுத்திக் கொன்ற தாய்!