கோவா முன்னாள் முதலமைச்சர் பாரிக்கரின் மறைவுக்கு பிறகு, பாஜக, எம்.ஜி.பி. கட்சி ஆதரவுடன் பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்தை முதலமைச்சராக தேர்வு செய்தது.
கோவா துணை முதலமைச்சர் பதவி நீக்கம் - முதலமைச்சர்
பனாஜி: பாஜக கூட்டணிக்கு எதிராக செயல்பட்டதால் கோவா துணை முதலமைச்சர் சுதின் தாவில்கார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
கோவா துணை முதலமைச்சர் நீக்கம்
எம்.ஜி.பி. கட்சியைச் சேர்ந்த சுதின் தாவில்காருக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தது. ஆனால் தற்போது, சுதின் தாவில்கார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து சாவந்த் கூறுகையில், கூட்டணி தர்மத்துக்கு எதிராக சுதின் தாவில்கார் செயல்பட்டதாகவும், தன் தம்பியான தீபக்கை சிரோதா இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களம் இறக்கியதால்தான் அமைச்சரவையில் இருந்து சுதின் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.