தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவா முதலமைச்சருக்கு கரோனா உறுதி! - கோவா மாநில முதலமைச்சர்

பானாஜி: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கரோனா தொற்று உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கோவா முதலமைச்சருக்கு கரோனா!
கோவா முதலமைச்சருக்கு கரோனா!

By

Published : Sep 2, 2020, 4:19 PM IST

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால், வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன். வீட்டிலிருந்தே எனது வேலைகளை செய்வேன். முன்னதாக, என்னை சந்தித்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கரோனா சோதனையை எடுத்துக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்கொண்டுவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை 66 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்தும், 37 லட்சத்து 69 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதையும் படிங்க...மத்திய அமைச்சர் மகனுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details