இது குறித்து கோவா சபாநாயகர் ராஜோஷ் பட்னேகர், "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள், அக்கட்சியிலிருந்து விலகி, பாஜகவுடன் இணைந்துள்ளனர். அதற்கு தன்னிடமும் அம்மாநில முதலைச்சர் பிரமோத் சாவந்த்திடமும் கடிதங்களை கொடுத்துள்ளனர்" என்றார். அந்த கடிதங்களை சபாநாயகர் ஏற்கொண்டுள்ளார்.
கோவாவில் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவல்! - பாபு கவ்லேகர்
பனாஜி: கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் உள்பட 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
sabha
பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாபு கவ்லேகர், "முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மேற்கொண்டு வரும் நற்செயல் காரணமாக, நாங்கள் 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளோம். மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நலத்திட்டங்களை பெற்றுதர முடியவில்லை. தனிப்பெரும் கட்சியாக இருந்தும் எங்களால் ஆட்சியமைக்க முடியவில்லை" என்றார்.