கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 71 லட்சத்து 70 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 69 ஆயிரத்து 231 பேர் உயிரிழந்தனர். இதுவரை ஒரு கோடியே 6 லட்சத்து 75 ஆயிரத்து 734க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 1.71 கோடி பேர் பாதிப்பு...! - உலகெங்கிலும் கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம்
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஒரு கோடியே 71 லட்சத்து 70 ஆயிரத்து 446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 69 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. மேலும், நேற்று (ஜூலை 29) ஒரே நாளில் புதிதாக 70 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் சின்ஜியாங்கை சேர்ந்த 105 பேருக்கு இன்று (ஜூலை 30) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வடமேற்கு பகுதியில் 96 பேரும், லியோனிங்கில் ஐந்து பேரும், பெய்ஜிங்கிலும் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.