உலகை உலுக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்றைய (ஜூன் 22) நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்து 51 ஆயிரத்து 398ஆக உயர்ந்துள்ளது. அதேபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 70 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.