தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகளவில் 84 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு! - உலகளவில் கரோனா குறித்த விபரம்

ஹைதராபாத்: கோவிட்-19 எனும் கரோனா தொற்றால் உலகளவில் 84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

By

Published : Jun 18, 2020, 3:09 PM IST

உலகம் முழுவதும் 83 லட்சத்து 92 ஆயிரத்து 582 பேர் கரோனா தொற்றால் பாத்திக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 4 லட்சத்து 50 ஆயிரத்து 452 பேர் உயிரிழந்தனர். இதுவரை கரோனா பெருந்தொற்றிலிருந்து 44 லட்சத்து 5 ஆயிரத்து 312 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் மருத்துவமனையில் 28 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால், அந்நாட்டில் இறப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 575ஆக உயர்ந்தது. அவர்களில் 19 ஆயிரத்து 118 பேர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.

அதுபோல், பெய்ஜிங்கில் நேற்று (ஜூன் 17) 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதில் மூவருக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நேற்று மட்டும் 578 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. மேலும், 411 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 9 பேர் உயிரிழந்தனர்.

தென்கொரியாவின் தலைநகரில் கரோனா தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தற்போது 59 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும், தென்கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் அறிவித்த புள்ளி விவரங்களில் 12 ஆயிரத்து 257 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதில், 280 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 334 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க:வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை தொடங்கிவைக்கும் மோடி

ABOUT THE AUTHOR

...view details