ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாகச் செயல்பட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடி, அவற்றிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளாதாக ட்விட்டரில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
"கைவிடவேண்டியது வெறுப்புணர்வை தான்" - மோடிக்கு ராகுல் பதில்
மோடி: பிரதமர் மோடி கைவிடவேண்டியது வெறுப்புணர்வைதான் அன்றி சமூக வலைதளங்களை அல்ல என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
rahul gandhi
இந்தச் செய்தி பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் அதிர்ந்துபோயியுள்ள நிலையில், மோடியின் பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், "பிரதமர் மோடி கைவிடவேண்டியது வெறுப்புணர்வைதானே தவிர, சமூக வலைதளங்களை அல்ல" என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : தடுப்புக் காவலில் உமர் அப்துல்லா - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!