ராணுவத்தில் குறுகிய கால பணி திட்டத்தின் மூலம்தான் இதுநாள்வரை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளனர். அதுவும், தளவாடங்கள், சட்டம், மருத்துவம், விமான போக்குவரத்து கட்டுப்பாடு, கல்வி, விளையாட்டு, இசை ஆகிய துறைகளில்தான் தேர்வு செய்யப்பட்டு வந்துள்ளனர். குறுகிய காலம் பணி திட்டம் என்பது குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் ராணுவத்தில் சேவை செய்வதாகும்.
ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் - ராணுவம்
டெல்லி: ராணுவத்தில் ஓய்வுகாலம் வரை பணியில் இருப்பதற்கான செயல் திட்டத்தை பெண்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.
Indian Army
இந்நிலையில் ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த 2019ஆம் ஆண்டு செயல்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. ஓய்வுகாலம் வரை பணியில் இருப்பதற்கான செயல்திட்டத்தை பெண்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பெண்களில் பணிகாலம் உயர்த்தப்பட்டு, அவர்களுக்கு பணி உயர்வு அளிக்கப்படுவதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.