ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஹலேனா என்ற கிராமத்தில் வசித்தும்வந்த 14 வயது சிறுமி ஒருவர், நேற்று கால்நடைகளுக்குத் தீவனம் அளிப்பதற்காக விளைநிலத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் அச்சிறுமியை வற்புறுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் சிறுமி கூச்சலிடவே வயலில் வேலை செய்துகொண்டிருந்த அவரது அண்ணன் சம்பவம் இடம் விரைந்தார். ஆனால், அதற்குள் குற்றவாளி சம்பவ இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டார்.