காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பிள்ளைத்தெருவாசல் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2ஆம் தேதியன்று கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் ராணி, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பெண்மணியின் செல்ஃபோன் எண்ணை டிராக் செய்தபோது திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் என்னும் ஊரில் தங்கியிருப்பது தெரியவந்தது.
சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை:பெண் உட்பட இருவர் கைது - abused
புதுச்சேரி: காரைக்காலில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்த பெண் உட்பட இருவரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்
அங்கு விரைந்த போலீசார் அப்பெண்மணியை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்ற அப்பெண்மணி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியை கடத்திச் சென்ற பெண்மணி மற்றும் காரில் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த கோட்டுச்சேரியை சேர்ந்த சுரேஷ் (26) ஆகிய இருவரையும் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் இருவரையும் காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
15 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சுரேஷ் காரைக்கால் கிளை சிறையிலும் அப்பெண்மணி புதுச்சேரி காலாப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.