தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்! - corona updates

டெல்லி: உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக ரத்துசெய்யப்படுவதாக காசியாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்!
டெல்லி - காசியாபாத் எல்லை மீண்டும் மூடல்!

By

Published : May 26, 2020, 11:21 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் எல்லையில் கடுமையான வாகன நெருக்கடி ஏற்பட்டது. காசிப்பூர் மண்டி பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் எறும்புகள் போல சாரைசாரையாய் காத்துக்கிடந்தன.

இதையடுத்து, அம்மாவட்ட நிர்வாகம், “டெல்லியில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், காசியாபாத் பகுதியிலிருந்து டெல்லிக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டது.

அவசர ஊர்தி, அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர, வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், "இந்த முடிவு தலைமை மருத்துவ அலுவலரின் பரிந்துரையின்பேரில் எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை எல்லைகளில் அநாவசியமாக யாரும் நுழைய அனுமதியில்லை.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழக்கம்போல அனுமதியளிக்கப்படும். மருத்துவர்கள், வங்கி அலுவலர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அடையாள அட்டையே போதுமானது, பாஸ் தேவையில்லை.

குறிப்பாக, இந்த உத்தரவில் அரசு ஊழியர்கள் டெல்லிக்குள் காலை 9 மணிக்கு முன்னதாகவும், காசியாபாத்தினுள் மாலை 6 மணிக்குப் பிறகும் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். வழக்கறிஞர்களும் டெல்லிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது..

இதையும் படிங்க:'குவாரன்டைனா? நெவர்...' - சர்ச்சையில் சிக்கிய சதானந்த கவுடா!

ABOUT THE AUTHOR

...view details