இந்தியாவின் இதயமாக கருதப்படும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில், கிழக்கு டெல்லி மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் களமிறக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் அரவிந்தர் சிங்கும், ஆம் ஆத்மி சார்பில் அதீதியும் களமிறங்கினர்.
இந்நிலையில், இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ண தொடங்கியது முதலே, பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அதீதியை பின்னுக்கு தள்ளி பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மகேஷ் கிரி, ஒரு லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிபெற்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலையில் உள்ளதால், கௌதம் கம்பீரின் வெற்றி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.